Home இலங்கை கல்வி உலகளவில் சுமார் 17,000 வேலைவாய்ப்புகளை அறிவித்தது எமிரேட்ஸ் குழுமம்

உலகளவில் சுமார் 17,000 வேலைவாய்ப்புகளை அறிவித்தது எமிரேட்ஸ் குழுமம்

0

எமிரேட்ஸ் குழுமம் (Emirates Group) இந்த ஆண்டில் 350 விதமான பணித்துறைகளில் 17,300 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஊழியர் சேர்ப்பு நடவடிக்கை, எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனும், Dnata
நிறுவனத்துடனும் தொடர்புடைய விரிவான பணிகள் மற்றும் விருத்திகளை ஆதரிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் விமானிகள், கேபின் குழு (cabin crew), பொறியியலாளர்கள், தகவல் தொழில்நுட்பம் (IT), மனிதவள மேலாண்மை (HR), நிதி, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்கும்.

பணியாளர் ஆட்சேர்ப்பு

Dnata
நிறுவனம் மட்டும் 4,000க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் தரையிறக்கப் பணியாளர்களை நியமிக்க உள்ளது.

இந்த நிலையில், “எமது துணிச்சலான இலக்குகளை அடைய, உலகத் தரம் வாய்ந்த திறமையை நாங்கள் தேடிக்கொண்டு இருக்கிறோம்,” என எமிரேட்ஸ் விமான நிறுவனமும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அஹ்மத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எமிரேட்ஸ் குழுமம், 150 நகரங்களில் 2,100க்கும் மேற்பட்ட திறமையான நபர்களுக்கான திறந்த நாள் (open days) மற்றும் பணியாளர் ஆட்சேர்ப்பு நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version