Home இலங்கை சமூகம் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு: பெரும் பணமோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் தீவிர தேடுதல்

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு: பெரும் பணமோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் தீவிர தேடுதல்

0

பிரித்தானியா மற்றும் போலந்தில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் 17.5 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ள சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

சந்தேக நபர் ராஜகிரியவில் உள்ள ஜன ஜெய நகர கட்டிடத்தில் இயங்கும் தனது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான IMH LOGISTICS (PVT) LTD ஊடாக பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ரணிலை ஆதரிப்பதற்காக புதிய அரசியல் கூட்டணி

கைது நடவடிக்கை

இந்த மோசடி தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி, சந்தேக நபரான பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெர்னாண்டோ என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைபேசி இலக்கம்

அத்துடன், சந்தேகநபரின் முகவரி மற்றும் பிற விவரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591643 அல்லது 071-8137373 என்ற இலக்கத்தின் ஊடாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.  

மீள ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்: ஒதுக்கப்படவுள்ள மில்லியன் கணக்கிலான நிதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

NO COMMENTS

Exit mobile version