Home விளையாட்டு பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இலங்கையை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இலங்கையை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

0

புதிய இணைப்பு

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்த சொற்ப இலக்கண 77 ஓட்டங்களை பெரும் தடுமாற்றத்திற்கு மத்தியிலேயே தென்னாபிரிக்கா கடந்திருந்தது.

இந்நிலையில் 16.2 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா அணி வெற்றியிலக்கை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இரண்டாம் இணைப்பு

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரின் இன்றைய (03) போட்டியில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கட்டுகளை அதிகபடியாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 78 என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா துடுப்பெடுத்தாடி வருகிறது.

முதலாம் இணைப்பு 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண ரி20 போட்டியானது இன்று (3) ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போட்டியானது நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.

ஓய்வை அறிவித்துள்ள மற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர்

இலங்கை அணி

அதனை தொடர்ந்து இலங்கை அணி 9 ஓவர்கள் முடிவில் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது.

அதன் போது, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெத்தும் நிசங்க 8 பந்துகளில் வெறும் 3 ஓட்டங்களை பெற்று ஒட்னியல் பார்ட்மென்னின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

தங்கப்பதக்கங்களை சுவீகரித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்

சரியும் விக்கெட்டுக்கள்

இதனையடுத்து, களமிறங்கிய கமிந்து மென்டிஸ் 11 ஓட்டங்களுடன் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய வனிந்து ஹஸரங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.  

இலங்கை கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ சீருடையுடன் யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version