சபாநாயகர் அசோக ரன்வெல(ashoka rangwalla) தனது பட்ட தகுதியை நிரூபிக்க முடியாமல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஆளும் அநுர அரசின் மற்றுமொரு எம்பியின் பட்ட தகுதி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியில்(npp) இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின்(Kosala Nuwan Jayawira) கல்வித் தகைமை தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் பொறியியலாளர்
பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னைப் பொறியியலாளர் என்று அவர் விளம்பரப்படுத்தியிருந்தார்.
ஆனால் தற்போது நாடாளுமன்ற இணையத்தளத்தில் கல்வித் தகுதி டிப்ளோமா பெற்றவர் என்றும், தொழில்முறைத் தகுதி உதவிப் பொறியாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய நாடாளுமன்றத்தில் கல்வித் தகுதியை முன்வைத்து மோசடி செய்தவர்கள் ஏராளம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி ஆறு போலி வைத்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் கூறினார்.