Home இலங்கை அரசியல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

0

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன்
வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கிறிஸ்தோபர் டினேஸ் றொசின்ரன், மதுர
பிரபோத் ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு

இதேவேளை, வன்னித்தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தி
அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ்,வின்சன் டிபோல் அருள்நாதன், சின்னத்துரை கலாநிதி
ஆகியோரும்

மன்னார்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஞானப்பிரகாசம் மரியசீலன்,முருகேசு
கதிர்காமநாதன்,
இந்திரகுமாரன் செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களின் பட்டியலும் சற்று முன்னர் வெளியிடப்பபட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/epdp-vanni-district-candidates-announced-1728221648

NO COMMENTS

Exit mobile version