Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் வேட்புமனு தாக்கல் செய்த ஈரோஸ் ஜனநாயக முன்னணி

நுவரெலியாவில் வேட்புமனு தாக்கல் செய்த ஈரோஸ் ஜனநாயக முன்னணி

0

எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி (Eros Democratic Front)      வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

நேற்று (09) மாலை
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும்
மாவட்ட செயலாளருமான நந்தன கலபடவிடம் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின்
சார்பில் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும்
சட்டத்தரணி சுப்பிரமணியம் காண்டீபன் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை
தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

முதல் முறையாக வேட்புமனு தாக்கல்

நுவரெலியா மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி அரசியல் கட்சியாக நாடாளுமன்ற
தேர்தலில் முதல் முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதேநேரத்தில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையில் நான்கு
மாவட்டங்களில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி போட்டியிடவுள்ளதாகவும் தேர்தலில்
ஒலிபெருக்கி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இம்முறை பெருந்தோட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்ற சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் சமூக
செயற்ட்பாட்டாளர்களாவும் விளங்கும் இளம் சமூகத்தினருக்கும் கட்சியின் சிரேஸ்ட
உறுப்பினர்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

Exit mobile version