Home இலங்கை சமூகம் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம் : அச்சுறுத்தும் தோட்ட நிர்வாகம்

சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம் : அச்சுறுத்தும் தோட்ட நிர்வாகம்

0

தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாவை வழங்குமாறு
பெருந்தோட்ட நிறுவனங்களை வலியுறுத்தி தலவாக்கலை (Talawakelle)- நானுஓயா தோட்டத் தொழிலாளர்கள் பேராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த போராட்டமானது, நேற்று (14.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும்
என தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

தோட்ட நிர்வாகம் 

மேலும், தாம் கடின உழைப்பை வழங்குகின்ற போதிலும் அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை
எனவும், இந்த நிலைமை தொடரக் கூடாது எனவும் கோசம் எழுப்பியவாறு பேராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தோட்ட நிர்வாகம்
அச்சுறுத்துகின்றமைக்கு தொழிலாளர்கள் கடும்
எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version