Home சினிமா ஞானத்தை ஜெயிலுக்கு போக வைத்துவிட்டு குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் பரபரப்பு கதைக்களம்

ஞானத்தை ஜெயிலுக்கு போக வைத்துவிட்டு குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் பரபரப்பு கதைக்களம்

0

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல், சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று.

குணசேகரன் Vs அவரது வீட்டுப் பெண்கள் என்று தான் கதை நகர்கிறது.
முதல் பாகத்தில் பெண்கள் ஆண்களை எதிர்க்கவே கிளைமேக்ஸ் வரை ஆனது, ஆனால் இந்த 2ம் பாகத்தில் எதிர்க்கிறார்கள், பின் அடங்குகிறார்கள் இப்படியே கதை செல்கிறது.

8 நாட்களில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தற்போது கதையில் பார்கவியின் தந்தை இறக்க அவரின் இறப்பிற்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள்.

போராட்டம் செய்து இப்போது குணசேகரன் மீது FIR போட வைத்துவிட்டார்கள்.

புரொமோ

இன்றைய எபிசோடில் போலீஸ் குணசேகரன் வீட்டிற்கு வர அவர் அப்பாவி ஞானத்தை ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிறார்.

குணசேகரன் தான் ஜெயிப்பதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பான், நான் ஜெயித்துக் காட்டுகிறேன் என்கிறார்.

இன்னொரு பக்கம் பார்கவி நீதிமன்றம் வந்து என்ன சொல்லப்போகிறார் என்ற பதற்றம் தான் அனைவரிடத்திலும் உள்ளது. இதோ புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version