Home சினிமா திருமண விஷயத்தில் தர்ஷன் சொன்ன முடிவு, கதிரின் பேச்சு, உயிர்பலி… எதிர்நீச்சல் புரொமோ

திருமண விஷயத்தில் தர்ஷன் சொன்ன முடிவு, கதிரின் பேச்சு, உயிர்பலி… எதிர்நீச்சல் புரொமோ

0

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன் தாராவின் விசேஷத்தை வைத்து பிரச்சனை நடந்தது.

எப்படியோ குணசேகரன் நினைத்தது நடக்காமல் பெண்களுக்கு சாதகமாக விசேஷம் முடிவடைந்தது.
அடுத்து குணசேகரன் டார்க்கெட் தர்ஷனின் திருமணம் தான். இந்த பிரச்சனையில் பார்கவி மற்றும் அவரது அப்பா சிக்க ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது.

இதனால் பார்கவி நீதிமன்ற உதவியுடன் குணசேகரன் வீட்டில் தங்குகிறார்.

அப்பா இல்லாமல் நாங்கள், வடிவேலு பாலாஜி மகனின் எமோஷ்னல் பேச்சு.. இப்படியொரு நிலைமையா?

புரொமோ

ஒருபக்கம் குணசேகரன் தர்ஷன்-அன்புக்கரசி திருமண ஏற்பாடு செய்ய இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தர்ஷன்-பார்கவி திருமணம் என கூறி வருகிறார்.

இதில் யாருடன் யாருக்கு திருமணம் நடக்கும் என்பதே தெரியவில்லை.
இன்றைய எபிசோட் புரொமோவில், கதிர் அறிவுக்கரசி மற்றும் அவரது கூட்டத்தை அறைக்குள் அழைத்து வைத்திருக்கிறார், அதைப்பார்த்து நந்தினி கோபப்படுகிறார்.

பின் தர்ஷனிடம் ஈஸ்வரி பார்கவி தான் பெண் என கூற இன்னொரு பக்கம் குணசேகரனிடம் சென்று அன்புக்கரசியை திருமணம் செய்ய தயார் என்கிறார்.
இதற்கு இடையில் குணசேகரன் மாமா இந்த திருமணத்தில் ஒரு உயிர் பலி இருக்கிறது என கூறுவிட்டு சென்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version