Home சினிமா மணிவிழா நின்றதால் எகிறிய கதிர், நந்தினி கொடுத்த ஷாக்.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ

மணிவிழா நின்றதால் எகிறிய கதிர், நந்தினி கொடுத்த ஷாக்.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ

0

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் முதல் பாகம் குணசேகரன் ஆதிக்கத்துடன் ஒளிபரப்பாகி வந்தது, தொடர் முடியும் இறுதியில் தான் பெண்கள் கொஞ்சம் கெத்து காட்ட ஆரம்பித்தார்கள்.

முதல் பாக முடிவடைந்த வேகத்தில் அடுத்த பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்புடன் ஒளிபரப்பாக தொடங்கியது.

முதல் பாகத்தை தாண்டி குணசேகரன் 2ம் பாகத்தில் சைலன்டாக வில்லத்தனம் செய்து வருகிறார்.

புரொமோ

தற்போது கதையில் குணசேகரன்-ஈஸ்வரி மணிவிழா நிகழ்ச்சி எபிசோட் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் தாரா பெரியவள் ஆக மணி விழா நிற்கிறது. இதனால் குணசேகரன் அன் கோ செம கோபம் அடைகிறார்கள்.

இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி மணிவிழா வேண்டாம் என செல்ல நந்தினி தனது மகளுக்கு அவரை நலங்கு வைக்க கூறுகிறார்.

இதனைப் பார்த்த கதிர் ஈஸ்வரியை மோசமாக திட்டி அவரை தனது மகளுக்கு எதுவும் செய்ய கூடாது என கூறுகிறார்.

நந்தினி, ஈஸ்வரிக்கு ஆதரவாக பேச கதிர் அவரை அடிக்க செல்ல எல்லோருக்கும் செம ஷாக்.

இதோ இன்றைய எபிசோட் புரொமோ,

NO COMMENTS

Exit mobile version