எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட கொடூரமான இந்த நபருக்கு எப்போது தண்டனை கிடைக்கும், எப்படிபட்ட தண்டனை கிடைக்கும் என்பதை பார்த்த தான் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
அவர் மீது குண்டாஸ் போடப்பட்டும் போலீஸிடம் சிக்காமல் தப்பித்துக்கொண்டே வருகிறார்.
புரொமோ
போலீஸிற்கு பயந்து ஓடிஒளிந்து கொண்டிருந்தாலும் ஜனனியை பழிவாங்குவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.
முதலில் வீட்டைவிட்டு அனுப்ப பார்த்தார், வண்டியை எரிக்க பார்த்தார், வண்டியை பணம் காட்டி மிரட்டினார். இப்படி தொடர்ந்து அவர்களது தொழிலுக்கு பிரச்சனை கொடுக்க தற்போது திறப்பு விழாவில் ஜனனியை முடித்துக்கட்ட பிளான் போட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் கதிர் தனது மகள் தாராவிற்கு போன் செய்து போலீஸ் பிரச்சனை குறித்து கூற அவர் பதறியடித்துக்கொண்டு தனது அம்மாவை பார்க்க வருகிறார்.
அப்பா மீது போட்டுள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என தனது பாட்டியிடம் அழுகிறார். ஆனால் ஜனனி, நம்மை டைவர்ட் செய்வதற்காக தான் இப்படி செய்துள்ளார்கள் என தெளிவாக உள்ளார். இதோ இன்றைய எபிசோட் புரொமோ,
