Home இலங்கை அரசியல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னாரிற்கு விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னாரிற்கு விஜயம்

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றையதினம் புதன்கிழமை
(11.09.2024) மாலை மன்னாரிற்கு விஜயம் செய்துள்ளனர். 

இதன்போது, ஐரோப்பிய ஒன்றிய குழுவினர்,  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார்
அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும்
நாடாளுமன்ற உறுப்பினரிடம் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட செயலாளர்

இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளர் ஜஸ்ரின் துரம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version