Home இலங்கை அரசியல் குகதாசன் எம்.பி யை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு

குகதாசன் எம்.பி யை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு

0

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை (Shanmugam Gugadasan) ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது இன்று (05) தமிழரசுக் கட்சி மாவட்டப் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் பற்றியும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், திருகோணமலை மாவட்ட மக்களின் நிலவரம், தேர்தலில் உள்ள வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் போன்றவை உள்ளனவா எனவும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/eu-s-election-monitoring-team-met-gugadasan-1725557308

NO COMMENTS

Exit mobile version