Home முக்கியச் செய்திகள் இறுதி நேரத்தில் அபார கோல்: மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து

இறுதி நேரத்தில் அபார கோல்: மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து

0

ஐரோப்பியக்கிண்ண (EURO) இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து (England) மீண்டும் நுழைந்துள்ளமை காற்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில், ஐரோப்பியக்கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்துக்கு (Netherlands) எதிராக இறுதி நேரத்தில் ஒரு கோலை அடித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் முதற்பாதியில் ஏழாவது நிமிடத்தில் முதல் கோலை நெதர்லாந்து வீரர் சைமன்ஸ் (Xavi Simons) அடிக்க போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இங்கிலாந்து வெற்றி

தொடர்ந்து இங்கிலாந்துக்கு ஒரு பனால்ற்றி வாய்ப்பு கிடைக்க  இங்கிலாந்தின் அணித்தலைவர் ஹரி கேன் (Hary Kane) அதை கோலாக்கினார்.

தொடர்ந்து போட்டியில் மாறி மாறி இரு அணிகளுக்கும் வாய்ப்புக்கள் பல வந்திருந்தன. எனினும் கோல்கம்பத்தில் பட்டும் , கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டும் அந்த வாய்ப்புக்கள் நழுவின.

போட்டியின் கடைசி நேரத்தில் , இங்கிலாந்தின் வீரர் வற்கின்ஸ் (Ollie Watkins), மிகவும் நுணுக்கமாக அடித்து அபாரமாக ஒரு கோலை இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுக்க நிறைவில் 2-1 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இரண்டாவது தடவை

இந்தநிலையில், 1988 ம் ஆண்டுக்குப்பின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் போராடிய நெதர்லாந்து , நிறைவில் தோற்று வெளியேறியது.

மேலும், கடந்த தடவை பனால்ற்றி வாய்ப்பில் வெற்றிக்கிண்ணத்தை தவற விட்ட இங்கிலாந்து அணி,
இரண்டாவது தடவையாக ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version