2024 யூரோ கிண்ண கால்பந்து தொடரில் அல்பானிய (Albania) அணி வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
இத்தாலி மற்றும் அல்பானிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குரூப் சுற்றிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இந்த போட்டி தொடங்கிய 23 வினாடிகளில் அல்பானிய அணி முதல் கோலை அடித்தது.
அதிவேக கோல்
அதன் மூலம் யூரோ கிண்ண (European Championship) வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை அல்பானியா பெற்றுள்ளது.
மேலும், முன்னதாக 2004இல் கிரீஸ் அணிக்கு எதிராக ரஷ்யாவின் (Russia) டிமிட்ரி கிரிசெங்கோ (Dmitri Kirichenko) 67 வினாடிகளில் கோல் அடித்து இருந்ததே அதிவேக கோல் சாதனையாக இதுவரை இருந்தமை குறிப்பிடத்தக்கது.