Home இலங்கை அரசியல் ரணில் மீது ஐரோப்பிய தேர்தல் குழு குற்றச்சாட்டு

ரணில் மீது ஐரோப்பிய தேர்தல் குழு குற்றச்சாட்டு

0

Courtesy: Sivaa Mayuri

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரசாரத்தின் போது, சட்டத்தை மீறியதாக, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2024 ஜனாதிபதித் தேர்தல் குறித்த, தமது பூர்வாங்க அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, சமூக நலத்திட்டங்கள், வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் மற்றும் சிறு வணிகங்களுக்கான பண உதவித் திட்டங்கள் என்பன, தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டன.

சாதகமான பிரசாரங்கள்

அத்துடன், இந்த விடயங்களுக்கு அரச ஊடகங்களில் சாதகமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரசாரப் பேரணிகளில் அரச மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்றும் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

ஸ்பெயினின், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் பிரதான கண்காணிப்பாளருமான நாச்சோ சான்செஸ் அமோர் (Nacho Sánchez Amor), இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இறுதி அறிக்கை

இதேவேளை, தேர்தல் ஆணையகம், தேர்தலின் அனைத்து முக்கிய கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து சுதந்திரமாகவும் உறுதியுடனும் செயன்முறையை நடத்தியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில் குழு, எதிர்கால தேர்தல்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் உட்பட இறுதி அறிக்கையை வரும் மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version