Home இலங்கை சமூகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னாருக்கு விஜயம் !

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னாருக்கு விஜயம் !

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், மன்னாரிற்கு (Mannar) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விஜயமானது இன்று (11) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை (Charles Nirmalanathan ) அவருடைய மன்னார்
அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல்

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

மேலும், இதன்போது இலங்கை (Sri Lanka) தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளர் ஜஸ்ரின் துரமும் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/european-union-election-monitoring-team-mannar-1726063998

NO COMMENTS

Exit mobile version