Home இலங்கை சமூகம் மருந்து இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உத்தரவு

மருந்து இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உத்தரவு

0

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத மருந்து வகைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவிற்கு இந்த பணிபுரையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன வெளியிட்டு நிகழ்வின் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

மருந்து பொருள் இறக்குமதி

மருந்து பொருள் இறக்குமதி செய்வதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் இருக்கும் நிலையில் பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனம் ஒன்றில் மருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்க கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் இறக்குமதி செய்வது உள்நாட்டு விநியோகஸ்தர்களை அதிருப்தி அடையச் செய்யும் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரமேஷ் பத்திரணவிற்கு அறிவித்து, மருந்து பொருள் இறக்குமதியை இடை நிறுத்தியுள்ளார்.

மேலும், இது  தொடர்பில் சுகாதார அமைச்சரும் தனது இணக்கத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து மருந்து பொருள் இறக்குமதி செய்வதற்கு உள்நாட்டு மருந்துப் பொருள் இறக்கமதியாளர்கள், உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள், சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிச கட்சி என்பன எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version