Home இலங்கை அரசியல் வடக்கு மாகாண ஆளுநருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு

0

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின்
தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பானது, ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (09.09.2024) இடம்பெற்றுள்ளது.

தேர்தல் கள நிலவரங்கள்

இதன்போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து
கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஆளுநர் ஐரோப்பிய ஒன்றியத்தின்
தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் கூறியுள்ளார்.

மேலும், அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக
தெரிவித்த ஆளுநர், மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://tamilwin.com/article/european-union-s-election-monitoring-committee-1725890647

NO COMMENTS

Exit mobile version