Home இலங்கை சமூகம் புதிதாக நிறுவப்பட்ட கறுவாப்பட்டை அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

புதிதாக நிறுவப்பட்ட கறுவாப்பட்டை அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் திட்டத்தின் ஊடாக புதிதாக நிறுவப்பட்ட கறுவாப்பட்டை அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம், ஆதரவளிப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கறுவாப்பட்டை ஏற்றுமதியை அதிக பெறுமதியான சந்தைகளுக்கு ஊக்குவிப்பதற்கு சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) நிபுணத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கறுவா உற்பத்தி

இதன்படி, தரத்தை செயல்படுத்துவதற்கும் அமுலாக்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் உதவியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்பட்ட கறுவாப்பட்டை அபிவிருத்தி திணைக்களத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் திறந்து வைத்தார்.

இது, கறுவா உற்பத்தியை, மேலும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி, ஆரம்ப நிகழ்வின் போது குறிப்பிட்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version