Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை வழங்கும் நிகழ்வு

முல்லைத்தீவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை வழங்கும் நிகழ்வு

0

ஜப்பான் நாட்டின் நிதிப்பங்களிப்பில் காலநிலை மாற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்றையதினம்(13.02.2025) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் அகியோ ஐசோமாட்டா மற்றும் யூஎன்டிபி(UNDP) நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி எம்.எஸ்.அசுசா குபேட்டா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.  

சிறந்த முறையில் உற்பத்தி

மேலும், யூன்டிபி(UNDP) நிறுவனமானது குறித்த பகுதியில் உயிரியல் வாயு
தயாரிப்புக்கான உதவிகளை வழங்கியுள்ளதோடு இதனால் உயிரியல் வாயு சிறந்த
முறையில் உற்பத்தி செய்யப்பட்டு மக்கள் பலன் அடைவதையும் நேரில் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல்
பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொலிஸார் எனப் பலரும்
கலந்துகொண்டனர்.
  

NO COMMENTS

Exit mobile version