Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கம் பெற்றுள்ள கடன்: தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்த தகவல்

அநுர அரசாங்கம் பெற்றுள்ள கடன்: தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்த தகவல்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் ஆரம்ப இரண்டரை மாதங்களில் 43800 கோடி கடன் பெற்றுள்ளமை தகவல் அறியும் சட்டத்தில் தெரிவந்துள்ளது.

ராஹுல் சமந்த ஹெட்டியாராச்சி என்பவர் தகவல் அறியும் சட்டத்தில் அரச கடன் முகாமைத்துவ காரியாலயத்தில் சமர்ப்பித்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2024 செப்டம்பர் 23 முதல் 2024 நவம்பர் 12 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட மற்றும் கிடைக்கப்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொத்த கடன் 43800 கோடி என தெரியவந்துள்ளது.

நிதியுதவிகள் வழங்கப்படவில்லை

மத்திய வங்கி பிணைமுறி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய, சீன விஜயங்களின் போது பல்வேறு கடன் உதவிகள் குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் இதுவரை குறித்த நிதியுதவிகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version