Home இலங்கை அரசியல் தோட்ட மக்களை வெளியேற்ற முயற்சி : ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசரக் கடிதம்

தோட்ட மக்களை வெளியேற்ற முயற்சி : ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசரக் கடிதம்

0

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசரக் கடிதத்தில், இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்கள், தோட்ட நிர்வாகத்தால் வெளியேற்றப்பட முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பை உறுதி செய்யும் தடை உத்தரவு

பல தலைமுறைகளாக தோட்டங்களில் வாழ்ந்து வந்த மக்களை நிர்வாகத்தால் வெளியேற்றக் கூடாது என்பதையும், புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்ற பல முயற்சிகளை எதிர்த்த தங்கள் போராட்டங்களை நினைவூட்டிய அவர்,

“மொடர்ன் ஸ்லேவரி” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் எனவும் அழுத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தோட்டங்களில் வாழும் மக்கள், எக்காரணம் கொண்டும் தோட்ட நிர்வாகிகளால் வெளியேற்றப் படக்கூடாது என்ற அவசர தடைப் பணிப்புரையைத் தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் எனவும் அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version