Home முக்கியச் செய்திகள் சற்றுமுன்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்!

சற்றுமுன்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்!

0

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் காவல்துறை மா அதிபர்  தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன் முற்படுத்தப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் (Matara Magistrate) முன்னிபை்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தலைமறைவாக இருந்த தேசபந்து

2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் நேற்று (19) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த உத்தரவிற்கு அமைய தேசபந்து தென்னகோன் நேற்று மாலை விசேட பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/gKg_-1VMZTghttps://www.youtube.com/embed/gKg_-1VMZTg

NO COMMENTS

Exit mobile version