முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இன்று (12) காலை10 மணிக்கு விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட பெலியத்த சனா என அழைக்கப்படும் வீரசிங்க சரத் குறித்த வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழு
இதேவேளை, தாம் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தை பொதுவெளியில் வெளியிட்டமை தொடர்பில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகத் தமது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
