Home இலங்கை அரசியல் அரசியலில் இடைவேளை எடுத்துக்கொள்ளும் முன்னாள் அமைச்சர்

அரசியலில் இடைவேளை எடுத்துக்கொள்ளும் முன்னாள் அமைச்சர்

0

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையை வழங்கி புதிய கொள்கைகளைக் கொண்ட அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கம்

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் தங்களிடம் உள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு ஜனநாயக ரீதியில் இடமளிக்க வேண்டும் என்பது எமது பொறுப்பாகும்.

இந்தநிலையில், எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடப் போவதில்லை. நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை.

ஒரு கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 3ஆம் திகதி நாட்டிலிருந்து வெளியேறவுள்ளேன்.

ஆகையால் அரசியலிலிருந்து தற்காலிக இடைவேளை ஒன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளேன் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version