Home முக்கியச் செய்திகள் துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை (Duminda Dissanayake) ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கடந்த 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக மேலும் இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி விவகாரம்

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வெளியான தகவல்களுக்கு அமைய துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், முன்னாள் அமைச்சரை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு, விசேட வைத்தியரின் பரிசோனையைத் தொடர்ந்து, அவரை மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version