Home இலங்கை அரசியல் அரசிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்

அரசிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்

0

இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரிடம் இருந்து உத்தியோகபூர்வ இல்லத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லங்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மீள ஒப்படைக்கப்பட்ட 25 முதல் 30 இல்லங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.

முன்னுரிமைக்கு ஏற்ப அந்த இல்லங்கள் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 80 இல்லங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 இல்லங்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திலிருந்து 40 கிலோமீற்றர்களுக்கு அப்பால் பதிவிடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக விண்ணப்பிக்க முடியுமென குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version