Home இலங்கை அரசியல் வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு முன்னாள் எம்.பி கோரிக்கை

வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு முன்னாள் எம்.பி கோரிக்கை

0

இலங்கையில் அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா (A. L. M. Athaullah)கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி (NDF) சார்பில் போட்டியிட்ட  ஏ.எல்.எம். அதாவுல்லா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனையில் (Kalmunai) உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Human Rights Commission Of Sri Lanka) பிராந்திய அலுவலகத்தில் அவர் தமது முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (Election Commission) விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்திற் கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க….

https://www.youtube.com/embed/8-3IbDmjTGc

NO COMMENTS

Exit mobile version