Home இலங்கை அரசியல் பின் கதவு வழியாக தப்பித்து ஓடிய கோட்டாபய : சாமர சம்பத் பகிரங்கம்

பின் கதவு வழியாக தப்பித்து ஓடிய கோட்டாபய : சாமர சம்பத் பகிரங்கம்

0

சண்டியராக ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பின் கதவு வழியாக தப்பித்து படகு மூலம் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (10) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த அரசாங்கம் பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை குழப்ப முயற்சிக்கின்றது.

பலம் பொருந்திய சண்டியர் 

வியாபாரங்கள் பற்றி எந்தவித புரிதலும் இன்றி அமைச்சர் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

வீதியில் கருவேப்பிலை கட்டு ஒன்றையேனும் விற்பனை செய்த அனுபவம் எமக்கு உண்டு.

மக்கள் எதிர்ப்பு வெளியிடும் திட்டங்களை நாம் முன்னெடுப்பது பொருத்தமற்றது.

இந்த சந்தர்ப்பங்களில் கௌரவத்தை பார்க்காது ஒன்று, இரண்டு அடிகள் பின்வாங்குவதில் பிழையில்லை.

இந்தநிலையில் பலம் பொருந்திய சண்டியர் என ஆட்சி பீடம் ஏறிய கோட்டாபய பின் கதவு வழியாக தப்பிச் செல்ல நேரிட்டதனை நினைவுபடுத்துகின்றேன்”  என சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/_eFC8fUDqMw

NO COMMENTS

Exit mobile version