Home முக்கியச் செய்திகள் மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை (Neville Wanniarachchi) தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

சொத்துக் குவிப்பு 

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி கடந்த 2ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 மில்லியன் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் குறித்து வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை சட்டவிரோத சொத்துக்களை குவிப்பு தொடர்பாகவாக்குமூலம் பதிவு செய்வதற்காக வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version