Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

0

 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கையும், மாதாந்த எரிபொருள் கொடுப்பனவும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச் சுற்றறிக்கையின் படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, கூடுதலாக பெற்றுள்ள அனைத்து வாகனங்களையும் உடனடியாக ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் மாதாந்த எரிபொருள் கொடுப்பனை 900 லீட்டருக்கு கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் கொடுப்பனவு 2,250 லீட்டராக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version