Home இலங்கை கல்வி மாணவர்களின் சுமையை குறைக்க பரீட்சைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மாணவர்களின் சுமையை குறைக்க பரீட்சைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

0

இலங்கையில் தற்போதுள்ள பாடசாலை பரீட்சை வடிவங்களை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பரீட்சைகளின் சுமையை குறைப்பதன் மூலம், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளால் மாணவர்களின் மனதில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கல்வி சீர்திருத்தங்கள்

அதற்கமைய, மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நடைமுறை விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பரீட்சை வடிவங்களில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களை செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version