Home முக்கியச் செய்திகள் யாழில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள்

யாழில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள்

0

இலங்கை முழுவதும் 51 மனிதப்புதைகள் இருக்கலாம் எனவும் இப்போதைக்கு 21  புதைகுழிகளே அடையாளம் காணப்பட்ட நிலையில் 22 புதைகுழியாக அகழப்படும் செம்மணி சித்துபாத்தி மயான அகழ்வுகள் ஒரு தொடர் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தோண்டப்படும் மனிதப் புதைகுழிக்கு மேலதிகமாக மற்றுமோர் மனிதப் புதைகுழி இருப்பதாக இப்போது அஞ்சப்படுகின்றது.

கடந்த 1998 ம் ஆண்டு கிருசாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி வழங்கிய வாக்குமூலத்தின்படி  செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை தான்  அடையாளம் காட்டுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் 10 ல் இரண்டு இடங்களிலையே அகழ்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அவை அரச தரப்பால் தொடர்ந்து அகழப்படுவதற்கான முனைப்புகள்  வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இது நிலுவையில் உள்ள ஒரு விடயம் என குறிப்பிட்டிருந்தது.

எனவேதான் இப்போது அகழப்படும் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச அவதானிப்பு தேவை என வலியுறுத்தப்படுகிறது.

எனவேதான் இந்த விவகாரத்தில் உள்ள மர்மங்கள் ஏன் இந்த அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுகிறது இந்த  விடயத்தில் அரசு தனது இராணுவத்தை குற்றக் கூண்டில் ஏற்றுமா என்பது தொடர்பில்  ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

https://www.youtube.com/embed/Uw8DNj7cINM

NO COMMENTS

Exit mobile version