Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் தீயில் எரிந்து நாசமான வியாபார நிலையம்

தமிழர் பகுதியில் தீயில் எரிந்து நாசமான வியாபார நிலையம்

0

Courtesy: கபில்

வவுனியாவில் அமைந்துள்ள இலத்திரனியல் காட்சியறை ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டு முழுமையாக எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா – ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திலே இன்று (25) காலை 9. 45 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக
சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என
கூறப்படுகின்றது.

தீயை அணைப்பதற்கு முயற்சி

தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து
தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் எரிந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.

இதேவேளை தீயைக் கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் உதவியும் பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version