Home இலங்கை அரசியல் அனுரகுமார திசாநாயக்க விலையுயர்ந்த வாகனங்களில் பயணித்தமை குறித்து கட்சியின் விளக்கம்

அனுரகுமார திசாநாயக்க விலையுயர்ந்த வாகனங்களில் பயணித்தமை குறித்து கட்சியின் விளக்கம்

0

Courtesy: Sivaa Mayuri

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke), விலையுயர்ந்த வாகனங்களில் தேர்தல் பேரணிகளில் பயணித்தமை தொடர்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) விளக்கமளித்துள்ளார்.

அனுரகுமாரவின் பாதுகாப்பு கருதி இன்று (02.09.2024) கட்சி சில தீர்மானங்களை எடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை தமது கட்சி உறுதிப்படுத்துவது முக்கியம் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த வாகனங்கள்

அநுரகுமார ஏ8 (Audi A8) போன்ற விலையுயர்ந்த வாகனங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செல்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய மக்கள் சக்தி, பொது பணத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும் அதற்கான செலவை கட்சியே ஏற்கிறது என்றும் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version