ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவின் பின்னால் தனியார் நிறுவனமொன்று செயற்படுகின்றதா அல்லது இல்லையா என்பது குறித்து தான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவராக உள்ள ரஞ்சன் ராமநாயக்க மற்றும் அமைப்பாளர் டி.எம். டில்ஷான் ஆகியோரின் கொள்கைகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவை சிறப்பாக உள்ளன.
இதனாலேயே, நான் அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றேன். மேலும் அவர்களுக்கு பின்னால் யாரும் செயற்படுகின்றார்களா என்பது குறித்து நான் ஆராயவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,