உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையை பொதுமக்களுக்கு விநியோகிக்க வெளியிடுமாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் இறக்குமதியாளர் ஒருவர் கோரியமையே தற்போது திரிபுபடுத்தப்பட்டு குரல் பதிவாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியினுடையதாக கூறப்படும் குரல் பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
குரல் பதிவு
இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அமைச்சராக சதுரங்க அபேசிங்கவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “இறக்குமதியாளர் ஒருவர் உரிமம் இல்லாமல் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் மெட்ரிக் டொன் அரிசியைக் கொண்டு வந்துள்ளார். அவர் அதை உரிமம் இல்லாமல் கொண்டு வந்துள்ள காரணத்தினால் அமைச்சரை அழைத்த என்ன செய்வது என்று கேட்டுள்ளார்.”
பின்னர் சுங்கத்துறை அமைச்சர் இதற்கு எதுவும் செய்ய முடியாது. இதைப் பறிமுதல் செய்யலாம் எனக் கூறியுள்ளார்.
அ
தற்கு குறித்த இறக்குமதியாளர், இதனால் தற்போது எனக்கு எந்த பயனும் இல்லை. மக்களுக்கு இதனை விநியோகித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.
அதை பறிமுதல் செய்த பின்னர், நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வரி செலுத்த வேண்டும். என சுனில் ஹந்துன்னெத்தி கூறியதையடுத்து இது தெடர்பில் நீண்ட ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலை திரிபுபடுத்தியே இந்த குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ” பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க விளக்கமளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவித்ததற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி குறித்த குரல் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
