Home இலங்கை அரசியல் பிமல் ரத்நாயக்கவின் கள விஜயத்தின் போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்

பிமல் ரத்நாயக்கவின் கள விஜயத்தின் போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்

0

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இரத்மலானை தொடருந்து
முனையத்துக்கு கள விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, சிறிய வெடிப்பு சம்பவமொன்று
பதிவாகியுள்ளது.

தொடருந்து பெட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இன்று இந்த
சம்பவம் நிகழ்ந்தது.

இதன் விளைவாக சிறிய தீப்பரவலும் ஏற்பட்டது.

எனினும், தீ மேலும் பரவுவதற்கு முன்பாக சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்கள்
தீயை விரைவாக கட்டுப்படுத்தியிருந்தனர்.

தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தொழிலாளர்களுடன் நேரடியாகப்
பேசி, அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டதுடன் சரியான பாதுகாப்பு
உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த வகையான பாதுகாப்பு
உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தொடருந்து முனையத்துக்கான அமைச்சரின் முதல் விஜயமே அங்குள்ள தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய
அவசரத் தேவையை நினைவூட்டுவதாக மாறியது. 

NO COMMENTS

Exit mobile version