Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தங்கும் ஹோட்டலுக்கு அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்

ஜனாதிபதி தங்கும் ஹோட்டலுக்கு அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்

0

அநுராதபுரத்தில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்களானது, ஜனாதிபதி அநுராதபுரத்திற்கு வரும் போது தங்கும் ஹோட்டலுக்கும் முன்னால் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கைக்குண்டைப் போல் பந்தாக உருவாக்கப்பட்ட வெடிபொருள், விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் ஹக்கபடாஸ் எனப்படும் வெடிபொருள் என்று அனுராதபுர தலைமையகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்த மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் இருவர் வெளிப்பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version