Home இலங்கை சமூகம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

0

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வழக்கு நேற்று (25.04.2024) அழைக்கப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான உண்மைகளை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த முறைப்பாட்டில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

யாழில் 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய்!

சட்டத்தரணிகள் கேள்வி 

இந்நிலையில் மேலதிக விசாரணை தேவையா என சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்படி முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்ததுடன், அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இணைய வழியில் ஏலம்: இலங்கை சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கொழும்பில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் பெற சென்று உறங்கிய வர்த்தகருக்கு அதிர்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version