Home இலங்கை அரசியல் தமிழ் மக்களின் பல ஏக்கர் விவசாயக் காணிகள் அபகரிப்பு : குகதாசன் எம்.பி சுட்டிக்காட்டு

தமிழ் மக்களின் பல ஏக்கர் விவசாயக் காணிகள் அபகரிப்பு : குகதாசன் எம்.பி சுட்டிக்காட்டு

0

தமிழ் மக்களுடைய 41ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.

மூதூர் பட்டித்திடலில் இன்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவதே
முக்கியமாக காணப்படுகிறது. தமிழ் மக்களுடைய காணிகளை அடாத்தாக வனஜீவராசிகள்
திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், துறைமுக அதிகார சபை என மொத்தமாக 41
ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகளை கபளீகரம் செய்துள்ளனர்.

2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள்

அத்துடன் எல்லை நிர்ணய
ஆணைக்குழு சில பகுதிகளை வேறு பகுதிகளுடன் சேர்த்துள்ளனர். குச்சவெளியில் 31
விகாரைகள் கட்டுகின்றனர். இதற்காக 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள்
வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தனிநபர் காணிகளை பங்கு போட்டுக்
கொண்டிருக்கிறார்கள். இதனை மீட்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.’

அபிவிருத்திகளுக்காக அரசோடு இணைய வேண்டும். அதை விடவும் உரிமைகளை பெற
முயற்சிப்போம். நாடாளுமன்ற உறுப்பினராகி ஏழு கிழமையாகின்றது. அதற்குள் ஐந்து கோடி
ரூபா செலவில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன்.

கடற்றொழில் பிரச்சினைகளை
தீர்க்க 13 இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளேன். இது போன்று உரிமைகளை விட்டுக் கொடுக்காது
அபிவிருத்திகளை செய்வேன். அத்துடன் திரியாயில் விகாரைக்காக 3000க்கும் மேற்பட்ட
காணிகளை கபளீகரம் செய்யவுள்ளனர். எனவே இதனை தடுத்து வருங்காலத்தில் ஒன்றாய் செயற்படுவோம்.“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version