Home இலங்கை சமூகம் தொடரும் அனர்த்தங்கள்! வேகமாக உயரும் பலி எண்ணிக்கை

தொடரும் அனர்த்தங்கள்! வேகமாக உயரும் பலி எண்ணிக்கை

0

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அனர்த்த நிலை காரணமாக, 228 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மிக அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

அதிக உயிரிழப்புக்கள் 

பதுளை மாவட்டத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் காணாமல் போயுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 20 உயிரிழந்துள்ளடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், மொனராகலை, கொழும்பு, கேகாலை, அம்பாறை, யாழ்ப்பாணம், நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காலி, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலும் 35 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version