சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அனர்த்த நிலை காரணமாக, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மிக அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
