உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலன்று தேவாலயத்திற்கு வருகை தந்த போது குண்டு வெடிக்க வைத்தவர் தனக்கு முன்னால் தான் சென்றார் என சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
கிழக்குமாகாண அமைப்பாளர் சங்கர் ஆரோக்கியா தெரிவித்துள்ளார்.
மட்டு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற போது நேரடியாக
கண்ட காட்சிகளை விபரிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த தாக்குதலில் உயிரிழந்த குழந்தையொன்று தன் கையிலே இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் தனது மகனும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னால் இந்த பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
