Home உலகம் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

இந்தோனேசியாவின் (Indonesia
) வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் வடக்கு சுமத்ராவில் இன்று (08.04.2025) அதிகாலை 1.19 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களிடையே பெரும் அச்சம்

இதன் மையம் சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், கடற்பரப்பிலிருந்து 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது.

இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று அந்நாட்டின் காலநிலை மையம் அறிவித்துள்ளது. 

நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்பதால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என இந்தோனேசியாவின் நாட்டின் வானிலை மற்றும் புவியில் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.  

தாய்லாந்திலும், மியான்மர் நாட்டிலும் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version