Home இலங்கை சமூகம் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும்! டக்லஸ் தரப்பு கோரிக்கை

மனிதப் புதைகுழிகள் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும்! டக்லஸ் தரப்பு கோரிக்கை

0

வடக்கு கிழக்கில் காணப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பாகவும் நீதியான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்பட
வேண்டு்ம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்
பன்னீர்ச்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில எமது மக்கள் எதிர்கொண்ட இவ்வாறான அவலங்கள் பற்றிய
உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதால், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு
எதிராக அவை பயன்படுத்தப்படுவதாகவும், செம்மணி புதைகுழி தொடர்பா நீதியான
விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக
வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இதனைத்
தெரிவித்துள்ளார்.

சிறீதரன் எம்.பி 

மேலும், “நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை பொறுத்தவரையில் அவர் செயற்பாடுகள்
குறுகிய சுயநலன் சார்ந்தவை.

மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி அந்த அவலங்களுக்கு
எதிராக குரல் கொடுக்கின்ற ஒருவாராக தன்னை வெளிப்படுத்துவதன் மூலம், தன்னுடைய
அரசியலை பாதுகாத்துக் கொள்ளுகின்ற ஒருவர்.

அவரின் அரசியல் சீத்தவத்தை
பேசுவதென்றால், நீண்ட நேரம் பேச முடியும்.

இப்பொழுது மண்டைதீவு விவகாரத்தில் அக்கறை கொள்ளுகின்ற சிறீதரனை எம்பி,
நல்லாட்சி காலத்தில் என்ன செய்து கொணாடிருந்தார்? உண்மையில் மண்டைதீவு
விவகாலத்தில் அக்கறை உள்ள ஒருவராக இருந்திருந்தால், தாங்கள் இதயத்தினால்
இணைந்திருந்த நல்லாட்சி காலத்தில் விசாரகைளை மேற்கொண்டு உண்மைகளை
கண்டறிந்திருக்க வேண்டும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version