எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்பு மற்றும் கையொப்பத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தவறான அறிக்கைகளைப் பரப்புவது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் இன்று (23) பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தலைப்பை கொண்ட இரண்டு போலி அறிக்கைகள் பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவி வருவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய அறிக்கை
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமோ அல்லது சர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ அலுவலகமோ இதுபோன்ற எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்று அதன்போதுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் அந்த அலுவலகங்களில் பணிபுரியும் எந்த அதிகாரியாலும் வெளியிடப்படவில்லை என்றும் மேலும் கூறப்படுகிறது.
