Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கை குறித்து வெளியான உண்மைத் தகவல்

ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கை குறித்து வெளியான உண்மைத் தகவல்

0

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது.

போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கை கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்த அறிக்கை போலியானது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஊடகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்த போலி அறிக்கை தொடர்பில் தேசிய ஊடகங்கள் எவையும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version