Home இலங்கை பொருளாதாரம் பச்சை மிளகாய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

பச்சை மிளகாய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

0

தற்பொழுது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி செலவு

இதனால் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக கிலோ ஒன்றுக்கு நாம் 30 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய் செலவு செய்வதாகவும், விற்பனை செய்யும் பொழுது 70 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் மூலம் கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேசத்தில் 300ற்கு மேற்பட்டோர் மிளகாய் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

விலையில் வீழ்ச்சி

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் பயிர்ச் செய்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பச்சை மிளகாயினை உலர விடுவதற்கான இயந்திர வசதிகள் இல்லாத காரணத்தினால் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நாளாந்தம் ஏற்படுகின்ற செலவினை கூட தம்மால் பெற முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மிளகாய் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு : லண்டனில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் அதிரடி செயல்

நாட்டில் வேகமாக பரவி வரும் நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

NO COMMENTS

Exit mobile version